
இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர்கள் சாத்விக் - சிராக் வெண்கலம் வென்றனர்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் இந்திய இணை சாத்விக்-சிராக் தோல்வியடைந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின.
இதில் இந்தியாவின் சார்பில் சாத்விக் -சிராக் இணையினரும் சீனாவின் சென் பிஓ யாங் - எல் ஐயு ஒய் ஐ இணையினரும் மோதினர்.
67 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாத்விக் - சிராக் இணையினர் 19-21, 21-18, 12-21 என்ற புள்ளிகளில் தோற்றனர்.
கடைசியாக இந்த இணையினர் 2022-இல் வெண்கலம் வென்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.