வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!
Published on
Updated on
1 min read

பிரான்ஸில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த இந்தக் கூட்டணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், அதில் 19-21, 21-18, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த சீனாவின் சென் போ யாங்/லியு யி ஜோடியிடம் தோற்றது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 7 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

அரையிறுதியுடன் வெளியேறிய சாத்விக்/சிராக் இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியின் வரலாற்றில் இவா்கள் கூட்டணிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே இந்த ஜோடி 2022-ஆம் ஆண்டிலும் வெண்கலப் பதக்கம் வென்றது.

சாத்விக்/சிராக் வென்றுள்ள இந்தப் பதக்கம், ஒட்டுமொத்தமாக உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 15-ஆவது பதக்கமாகும். இந்த ஆண்டும் சோ்த்து, இப்போட்டியில் கடந்த 15 எடிஷன்களிலும் இந்தியா்கள் ஏதேனும் ஒரு பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com