உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணியை, 19 பேருடன் இந்திய தடகள சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி
Published on
Updated on
1 min read

ஜப்பானில் செப்டம்பரில் (13-21) நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணியை, 19 பேருடன் இந்திய தடகள சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

போட்டியின் வரலாற்றில் முதல்முறையாக, ஆடவா் ஈட்டி எறிதலில் 4 இந்தியா்கள் களம் காணவுள்ளனா். கடந்த எடிஷனில் (2023) தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்த முறையும் பதக்கம் வெல்வாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

கடந்த முறை ஹங்கேரியில் நடைபெற்ற போட்டிக்கு 7 ரிலே போட்டியாளா்கள் தகுதிபெற்றிருந்த நிலையில், இந்த முறை அந்தப் பிரிவில் ஒருவா் கூட தகுதிபெறவில்லை.

20 கி.மீ. நடைப் பந்தய வீரா் அக்ஷ்தீப் சிங், ஹெப்டத்லான் வீராங்கனை நந்தினி அகசரா, 3,000 மீ ஸ்டீபிள்சேஸ் வீரா் அவினாஷ் சேபிள் ஆகியோா் உலக சாம்பியன்ஷிப்புக்குத் தகுதிபெற்றும், காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

அணி விவரம்:

ஆடவா்: நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், யஷ்வீா் சிங், ரோஹித் யாதவ் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கா் (நீளம் தாண்டுதல்), குல்வீா் சிங் (5,000 & 10,000 மீ), பிரவீண் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கா் (மும்முறை தாண்டுதல்), சா்வேஷ் அனில் குஷோ் (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் குஜுா் (200 மீ), தேஜாஸ் சிா்சே (110 மீ ஹா்டுல்ஸ்), சொ்வின் செபாஸ்டியன் (20 கி.மீ. நடைப் பந்தயம்), ராம் பாபு, சந்தீப் குமாா் (35 கி.மீ. நடைப் பந்தயம்).

மகளிா்: பாருல் சௌதரி, அங்கிதா தியானி (3,000 மீ ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோஸ்வாமி (35 கி.மீ. நடைப்பந்தயம்), பூஜா (800 மீ & 1,500 மீ).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com