

ராய்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின்போது கழுத்தில் காயம் கண்ட கில் துணை கேப்டனாக இணைந்திருக்கிறார். எனினும், பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாதெமி உடற்தகுதிச்சான்று அளிப்பதன் அடிப்படையிலேயே, அவர் விளையாடுவது உறுதியாகும்.
ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் கண்ட ஹர்திக் பாண்டியா, அதிலிருந்து மீண்டு உடற்தகுதிபெற்றதை அடுத்து டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், கட்டாக் (டிச. 9), சண்டீகர் (டிச. 11), தர்மசாலா (டிச. 14), லக்னெள (டிச. 17), அகமதாபாத் (டிச. 19) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்),
ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா,
திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல்,
ஜிதேஷ் சர்மா (வி.கீ.),
சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஜஸ்பிரீத் பும்ரா,
வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.