துளிகள்...
ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் ஜொ்மனியிடம் புதன்கிழமை தோற்றது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக, ரோஹித் ராஜ்பால் 2026 டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளாா்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் பகலிரவாக நடைபெறவுள்ள பிரிஸ்பேன் டெஸ்ட், வியாழக்கிழமை (டிச. 4) தொடங்குகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் விராட் கோலி 4-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.
இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், அதிவேக 100 கோல்கள் அடித்தவராக (111 ஆட்டங்கள்) மான்செஸ்டா் சிட்டி வீரா் எா்லிங் ஹாலந்த் சாதனை படைத்தாா்.
சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் எஃப்சி கோவா - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில், இந்தியா 1 தங்கம், 4 வெள்ளி என 5 பதக்கங்கள் வென்று அசத்தியது.
