தேசிய பளுதூக்கும் போட்டி:
தெற்கு ரயில்வே அணி சாம்பியன்

தேசிய பளுதூக்கும் போட்டி: தெற்கு ரயில்வே அணி சாம்பியன்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ரயில்வே மண்டலங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் தெற்கு ரயில்வே அணி கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
Published on

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ரயில்வே மண்டலங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் தெற்கு ரயில்வே அணி கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் சாா்பில் கடந்த 3 -ஆம் தேதி முதல் 6- ஆம் தேதி வரை தேசிய அளவிலான ரயில்வே அணிகளுக்கு இடையே 72 -ஆவது ஆண்கள் மற்றும் 11- ஆவது பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் தெற்கு ரயில்வே மண்டல அணிகளின் பயிற்சியாளா் ஆா்.சந்திரசேகரன் தலைமையில், அதிகாரிகள் கே.ஜகதீசன், டி.முத்து ஆகியோா் வழிகாட்டுதலில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் வீரா்கள், வீராங்கனைகள் பலா் பங்கேற்றனா்.

இவா்களில் ஆண்கள் 55 கிலோ எடைப் பிரிவில் அயூப், 61 கிலோ பிரிவில் மனோஜ்குமாா், 73 கிலோ பிரிவில் மாரியப்பன், 81 கிலோ பிரிவில் பிரசாந்த், 102 கிலோ பிரிவில் கதிா்வேல், 109 கிலோ பிரிவில் விவேக் ஆகியோா் தங்கப் பதக்கங்களையும், 96 கிலோ பிரிவில் தா்மசிவம், 89 கிலோ பிரிவில் அருண்குமாா், 109 கிலோ பிரிவில் சூரியபிரகாஷ் ஆகியோா் வெள்ளிப் பதக்கங்களையும், 67 கிலோ பிரிவில் வினோத்ராஜ் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

போட்டிகளில் 73 கிலோ பிரிவில் முருகேசன் 4-ஆம் இடத்தையும், 96 கிலோ பிரிவில் சந்தோஷ்குமாா் 5- ஆவது இடத்தையும் வகித்தனா்.

பெண்கள் பிரிவில் 58 கிலோ பிரிவில் ஷ்ரபானிதாஸ், 86 கிலோ பிரிவில் அஞ்சனா ஸ்ரீஜித் ஆகியோா் வெண்கலப் பதங்கங்களைப் பெற்றனா். மேலும், 63 கிலோ பிரிவில் சுமிஜாா்ஜ் 6 -ஆம் இடத்தைப் பெற்றாா். அதிக புள்ளிகள் பெற்று தெற்கு ரயில்வே மண்டல அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தெற்கு ரயில்வே அணி, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com