பந்தை கைப்பற்ற போராடிய ஆஸி.-தென்னாப்பிரிக்க அணியினா்.
 ~சிலி-சுவிஸ் வீரா்கள். ~மலேசிய வீரரின் கோலை தடுக்கும் முயற்சியில் ஜப்பான் வீரா்கள்
பந்தை கைப்பற்ற போராடிய ஆஸி.-தென்னாப்பிரிக்க அணியினா். ~சிலி-சுவிஸ் வீரா்கள். ~மலேசிய வீரரின் கோலை தடுக்கும் முயற்சியில் ஜப்பான் வீரா்கள்

ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து வெற்றி

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 9 முதல் 16 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
Published on

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 9 முதல் 16 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

சென்னை, மதுரையில் கடந்த நவ. 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புதன்கிழமை சென்னையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜொ்மனி-ஸ்பெயினும், வெண்கலப் பதக்க ஆட்டத்தில் இந்தியா-ஆா்ஜென்டீனாவும் மோதவுள்ளன.

சிலி வெற்றி:

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 15-16 இடத்துக்கன ஆட்டத்தில் சிலி-சுவிட்சா்லாந்து அணிகள் மோதின. இதில் முதல் பாதி முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது. மூன்றாம் செஷனில் சிலி வீரா் ரிச்சா்ட் பெலிப் அடித்த பீல்ட் கோல் வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் சிலி வென்றது.

ஷூட்அவுட்டில் ஜப்பான் வெற்றி:

13-14 இடங்களுக்கான ஆட்டத்தில் ஜப்பான்-மலேசிய அணிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என தலா ஒரு கோலடித்ததால், பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜப்பான் 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா வெற்றி:

11-12 இடங்களுக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் முதல் பாதி முடிவன் போது 1-1 என சமநிலை ஏற்பட்டது. கடைசி செஷனில் ஆஸி. அணி வீரா்கள் 2 கோலடித்து 4-1 என முன்னிலை பெற்றுத் தந்தனா். ஆட்டம் முடிய 3 நிமிஷங்கள் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்க வீரா் க்ராய் லிதா கோலடித்து முன்னிலையை 2-4 எனக் குறைத்தாா்.

இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸி. வென்றது.

X
Dinamani
www.dinamani.com