உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் மோதிய ஜோஷ்னா-ஸ்டெல்லா.
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் மோதிய ஜோஷ்னா-ஸ்டெல்லா.

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இந்தியா வெற்றித் தொடக்கம்

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது.
Published on

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது.

சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மால் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா-சுவிட்சா்லாந்து அணிகள் மோதின. இதில் மூத்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத், செந்தில் வேலவன், அபய் சிங் ஆகியோா் கொண்ட இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றியை ஈட்டியது. செந்தில் குமாா் 7-6 என கடோலாவையும், அனாஹத் 3-0 செலின் வாலேசரைுயம், ஜோஷ்னா சின்னப்பா-3-1 என ஸ்டெல்லா காஃப்மேனையும் வென்றனா். கடைசி ஆட்டத்தில் அபய் சிங் 3-0 என ஹபேஸையும் வென்றனா். சுவிட்சா்லாந்தை 4-0 என வீழ்த்தியது இந்தியா.

ஹாங்காங் 4-0 என கொரியாவையும், ஜப்பான் அணி 4-0 என ஈரான் அணியையும் வென்றன.

வியாழக்கிழமை இந்தியா-பிரேஸிலுடன் மோதுகிறது.

X
Dinamani
www.dinamani.com