

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) ஏலத்துக்கு மொத்தம் ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தெருவோரம் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை கண்டறியும் வகையில் டி10 அடிப்படையில் ஐஎஸ்பிஎல் தொடங்கப்பட்டது. தற்போது 3-ஆவது சீசனையொட்டி மும்பையில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது.
நடப்பு சாம்பியன் மஹ்ஹி மும்பை சார்பில் அதிகபட்சமாக ரூ.32.5 லட்சத்துக்கு விஜய் பாலே ஏலத்தில் பெறப்பட்டார். சென்னை சிங்கம்ஸ் அணி சார்பில் கேதன் மட்ரே ரூ.26.4 லட்சத்துக்கு இரண்டாவதாக அதிகத் தொகைக்கு தக்க வைக்கப்பட்டார்.
ஏற்கெனவே 6 அணிகள் உள்ள நிலையில் நிகழ் ஆண்டு ஐஎஸ்பிஎல் தொடரில் அகமதாபாத் லயன்ஸ், டில்லி சூப்பர் ஹீரோஸ் என இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளன.
வரும் ஜனவரி 9 முதல் பிப்ரவரி 6 வரை சூரத் லால்பாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் இத்தொடர் நடைபெறவுள்ளது.நிகழாண்டு ஏலத்தில் 101 நகரங்களைச் சேர்ந்த 408 பேர் பங்கேற்றனர்.
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஐஎஸ்பிஎல் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆசிஷ் செலார், மினால் அமோல், சுரஜ் சமத், தீபக் சௌஹான், அணிகளின் உரிமையாளர்கள்பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.