

எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தத் தொடரில் முதல்முறையாக ஒரு வீரர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மதிப்புமிக்க வீரர் விருது வாங்கி சாதனை படைத்துள்ளார்.
எம்எல்எஸ் கோப்பையை இண்டர் மியாமி அணி முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது.
இந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி (38 வயது) 29 கோல்கள், 19 அசிஸ்ட்டுகளைச் செய்து தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருது வென்றார்.
இந்த சீசனில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுவென்ற மெஸ்ஸி, மதிப்புமிக்க வீரர் விருதையும் வென்றுள்ளார்.
கடந்த சீசனிலும் மெஸ்ஸி இந்த விருதை வென்றிருந்த நிலையில் இந்தாண்டும் வென்றது புதிய சாதனைக்கு வழிவகுத்துள்ளது.
முதல்முறையாக ஒரு வீரர் இந்த விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். அதுவும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த முறை வென்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.