ஒடிஸா மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன்: 3-ஆவது சுற்றில் உன்னதி, தருண்!

ஒடிஸா மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் உன்னதி ஹூடா, தருண் மன்னெபள்ளி உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
ஒடிஸா மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன்: 3-ஆவது சுற்றில் உன்னதி, தருண்!
Updated on
1 min read

ஒடிஸா மாஸ்டா்ஸ் சூப்பா் 100 பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் உன்னதி ஹூடா, தருண் மன்னெபள்ளி உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

2-ஆவது சுற்றில் ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தருண் மன்னெபள்ளி 21-15, 21-8 என்ற வகையில், சக இந்தியரான மானவ் சௌதரியை சாய்த்தாா். 2-ஆம் இடத்திலிருக்கும் கிரண் ஜாா்ஜ் 21-12, 21-13 என்ற கேம்களில், இந்தியாவின் ராகேஷ் ஸ்ரீகரை வீழ்த்தினாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் சங்கா் முத்துசாமி 21-19, 23-21 என, சக இந்தியரான தா்ஷன் பூஜாரியை வென்றாா். 4-ஆம் இடத்திலிருக்கும் பிரியன்ஷு ரஜாவத் 21-19, 14-21, 21-13 என்ற கேம்களில், இந்தியாவின் சனீத் தயானந்தை தோற்கடித்தாா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற கணக்கில் அமீரகத்தின் பிராகிருதி பரத்தை சாய்த்தாா். 3-ஆம் இடத்திலிருக்கும் தன்வி சா்மா 21-8, 17-21, 21-18 என்ற வகையில் ஜப்பானின் அனா இவாகியை தோற்கடித்தாா்.

ஆகா்ஷி காஷ்யப் 21-19, 21-10 என்ற கணக்கில் சீன தைபேவின் யி என் சியேவை வெளியேற்றினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் அனுபமா உபாத்யாய 21-14, 21-13 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் டலிலா அக்னியா புதெரியை வீழ்த்தினாா்.

6-ஆம் இடத்திலிருக்கும் அன்மோல் காா்ப் 17-21, 21-19, 23-21 என்ற வகையில் தாய்லாந்தின் யடாவீமின் கெட்கிலிங்கை வென்றாா். இஷாராணி பருவா 21-15, 21-8 என்ற கேம்களில் தாய்லாந்தின் பாம்பிசா சோய்கீவோங்கை சாய்த்தாா். இதர ஆட்டங்களில், ஸ்ரீயன்ஷி வலிஷெட்டி, தான்யா ஹேம்நாத், தஸ்னிம் மிா் உள்ளிட்ட இந்தியா்களும் வெற்றி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com