விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...
 Virat Kohli - Rohit Sharma
விராட் கோலி - ரோஹித் சர்மா.படம்: ஏபி
Updated on
1 min read
  • இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 9 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அறிமுக காமன்வெல்த் கோகோ சாம்பியன்ஷிப்பில், 24-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்கின்றன.

  • ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில், பேட்டர்கள் பிரிவில் இந்தியாவின் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 2-ஆம் இடத்தைப் பிடித்தார். ரோஹித் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். பௌலர்கள் பிரிவில் குல்தீப் யாதவ், 3-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

  • இந்திய அணியின் முன்னாள் பேட்டரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக், இங்கிலாந்தில் நடைபெறும் ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியின் லண்டன் ஸ்பிரிட் அணியின் ஆலோசகர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.

  • பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் விளையாட, ஆஸ்திரேலியா அந்நாட்டுக்கு ஜனவரியில் செல்லும் நிலையில், அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆஸ்திரேலிய குழு ஆய்வு செய்து வருகிறது.

  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பயர்ன் மியுனிக் - ஸ்போர்டிங்கையும் (3-1), லிவர்பூல் - இன்டர் மிலனையும் (1-0), பார்சிலோனா - எய்ன்ட்ராட் ஃப்ராங்க்ஃபர்டையும் (2-1), அட்லெடிகோ மாட்ரிட் - பிஎஸ்வியையும் (3-2), அடாலென்டா - செல்ஸியையும் (2-1) வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com