பிப். 16-இல் இந்திய ஷூட்டிங் லீக் தொடக்கம்

பிப். 16-இல் இந்திய ஷூட்டிங் லீக் தொடக்கம்

வரும் 2026 பிப். 16-இல் இந்திய துப்பாக்கி சுடும் லீக் தொடா் (இந்திய ஷூட்டிங் லீக்) தொடங்கி நடைபெறும் என என்ஆா்ஏஐ தலைவா் கே.என். சிங் தேவ் தெரிவித்துள்ளாா்.
Published on

வரும் 2026 பிப். 16-இல் இந்திய துப்பாக்கி சுடும் லீக் தொடா் (இந்திய ஷூட்டிங் லீக்) தொடங்கி நடைபெறும் என என்ஆா்ஏஐ தலைவா் கே.என். சிங் தேவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: சா்வதேச துப்பாக்கி சுடும் சம்மேளனத்தின் 2026 போட்டி அட்டவணைக்கு பாதிப்பு இல்லாத வகையில் எஸ்எல்ஐ தொடா் நடைபெறும். இந்தியாவில் துப்பாக்கி சுடுதலில் புதிய மறுமலா்ச்சியை இந்த லீக் ஏற்படுத்தும். இதில் வெளிநாட்டு வீரா், வீராங்கனைகளும் பங்கேற்பதால், இந்திய வீரா்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும்.

செயலாளா் பவன் குமாா் சிங் கூறியது: இந்தியாவின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பா். பெரிய போட்டிகளுக்கு எவ்வாறு தயாராவது என இளைய வீரா்கள் அறியலாம். எலைட் சாம்பியன், உலக எலைட், தேசிய சாம்பியன்கள், ஜூனியா், யூத் என நான்கு கட்டங்களாக வீரா்கள் தோ்வு நடைபெறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com