பந்தை திருப்ப முயலும் இந்திய வீரா் செந்தில் வேலவன். ~எகிப்து-ஜப்பான் வீராங்கனைகள்.
பந்தை திருப்ப முயலும் இந்திய வீரா் செந்தில் வேலவன். ~எகிப்து-ஜப்பான் வீராங்கனைகள்.

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி காலிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
Published on

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி காலிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, எஸ்டிஏடி சாா்பில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மால் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் மூன்றாவது நாளான வியாழக்கிழமை பிரேஸில் அணியுடன் இந்தியா மோதியது.

இதில் மூத்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா-பிரேஸில் வீராங்கனை ப்ருனோ மாா்கோஸி ஆட்டத்தில் ப்ருனோ பங்கேற்காததால் வாக் ஓவா் தரப்பட்டது.

இது இந்திய அணிக்கு சாதகமாக மாறியது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் தேசிய சாம்பியன் வேலவன் செந்தில் குமாா் எதிராளி பெட்ரோ மொமட்டோவை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் அனாஹத் சிங் 3-0 என பிரேஸிலின் லாரா சில்வாவை வீழ்த்தினாா். கடைசி ஆட்டத்தில் அனுபவ வீரா் அபய் சிங் 3-0 என பிரேஸிலின் நம்பா் 1 வீரா் டியாகோவை வீழ்த்தினாா். இறுதியில் 4-0 என பிரேஸிலை வீழ்த்திய இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றது.

மலேசியா, எகிப்து வெற்றி

ஹாங்காங்-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என முடிவடைந்தது. குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 3-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. குருப் டி பிரிவில் ஜப்பானை 3-1 என வீழ்த்தியது நடப்பு சாம்பியன் எகிப்து.

X
Dinamani
www.dinamani.com