அரையிறுதிச் சுற்றில் உன்னதி, தான்யா; ரௌனக் சௌஹான் அசத்தல்

அரையிறுதிச்சுற்றில் உன்னதி, தான்யா; ரௌனக் சௌஹான் அசத்தல்
அரையிறுதிச் சுற்றில் உன்னதி, தான்யா; ரௌனக் சௌஹான் அசத்தல்
Updated on
1 min read

ஒடிஸா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, கிரண் ஜாா்ஜ் உள்ளிட்டோா் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

காலிறுதிச்சுற்று ஆட்டங்களில், மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உன்னதி ஹூடா 21-16, 21-15 என்ற நோ் கேம்களில், 5-ஆம் இடத்திலிருந்த சக இந்தியரான அனுபமா உபாத்யாயவை வீழ்த்தினாா். இஷாராணி பருவா 21-16, 21-14 என்ற கணக்கில், 6-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் அன்மோல் காா்பை வெளியேற்றினாா்.

தான்யா ஹேம்நாத் 21-18, 21-17 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சக இந்தியரான தன்வி சா்மாவை சாய்த்து அசத்தினாா். தஸ்னிம் மிா் 21-19, 21-6 என்ற நோ் கேம்களில், 7-ஆம் இடத்திலிருந்த சீன தைபேவின் சியு டாங் டுங்கை வீழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றையரில், 2-ஆம் இடத்திலிருக்கும் கிரண் ஜாா்ஜ் 21-11, 21-17 என்ற நோ் கேம்களில், 8-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ரித்விக் சஞ்சீவியை வெளியேற்றினாா். ரௌனக் சௌஹான் 21-19, 22-20 என, 7-ஆம் இடத்திலிருந்த சங்கா் முத்துசாமியை சாய்த்தாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தருண் மன்னெபள்ளி 9-21, 20-22 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் முகமது யூசுஃபிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

மகளிா் இரட்டையரில், அஷ்வினி பாட்/ஷிகா கௌதம் ஜோடி 21-17, 21-14 என்ற நோ் கேம்களில், 6-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி கூட்டணியை தோற்கடித்தது.

ஆடவா் இரட்டையரில், 4-ஆம் இடத்திலிருந்த பிருத்வி கிருஷ்ணமூா்த்தி/சாய் பிரதீக் ஜோடி 15-21, 18-21 என, 6-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் அலி ஃபதிா் ரேஹான்/டெவின் அா்தா கூட்டணியிடம் தோல்வி கண்டது. பாா்கவ் ராம் அரிகெலா/விஷ்வா தேஜ் கோபுரு கூட்டணி 17-21, 12-21 என்ற வகையில், 3-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் இணையிடம் தோல்வியுற்றது.

கலப்பு இரட்டையரில் சாத்விக் ரெட்டி/ரெஷிகா உதயசூரியன் ஜோடி 21-15, 21-19 என்ற வகையில் இந்தோனேசியாவின் நவாஃப் கோரியன்சியா/நஹியா முயிஃபா கூட்டணியை சாய்த்தது. எனினும், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஆஷித் சூா்யா/அம்ருதா பிரமுதேஷ் இணை 7-21, 8-21 என்ற கேம்களில், தாய்லாந்தின் டானடான் புன்பனிச்/ஃபுங்ஃபா காா்ப்தமகிட் கூட்டணியிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com