

கொல்கத்தாவின் சால்ட் லேக் திடலுக்கு லியோனல் மெஸ்ஸி வருகை புரிந்தார்.
இவரைப் பார்க்க குவித்த கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். அங்கு குவிந்திருந்த ரசிகர்களைப் பார்த்து மெஸ்ஸி கை அசைத்தார்.
’கோட் டூர் ஆஃப் இந்தியா 2025’ என்ற பயண திட்டத்தின்படி மெஸ்ஸி இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படது.
கொல்கத்தாவில் தெற்கு டும்டும் - லேக் டவுன் பகுதியில் ஸ்ரீ பூமி ஸ்போர்டிங் கிளப் 70 அடி சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அதன்பிறகு, சால்ட் லேக் திடலுக்கு மெஸ்ஸி சென்றுள்ளார். அங்கு மோகன் பகான் அணியின் மெஸ்ஸி ஆல் ஸ்டார் அணியும் டையமண்ட் ஆர்பர் ஆல் ஸ்டார் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் மெஸ்ஸியின் மாஸ்டர்கிளாஸ் வகுப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.