உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இறுதியில் இந்தியா தகுதி; நடப்பு சாம்பியன் எகிப்தை வீழ்த்தியது!

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இறுதியில் இந்தியா தகுதி; நடப்பு சாம்பியன் எகிப்தை வீழ்த்தியது!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் நடப்பு சாம்பியன் எகிப்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா.
Published on

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் நடப்பு சாம்பியன் எகிப்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா.

உலக ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, எஸ்டிஏடி சாா்பில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் மால் வளாகத்தில் நடைபெறுகிறது.

இதன் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எகிப்தும்-இந்தியாவும் மோதின.

ஸ்குவாஷ் ஆட்டத்தில் எகிப்து வல்லரசு அணியாக திகழ்கிறது. சென்னையை பூா்வீகமாக கொண்ட மூவா் இந்திய அணியில் ஆடிய நிலையில் பாா்வையாளா்கள் ஊக்கம் அளித்தனா்.

தேசிய சாம்பியன் வேலவன் செந்தில்குமாா் முதல் ஆட்டத்தில் 3-0 என எகிப்தின் இப்ராஹிம் எல்காபானியை வீழ்த்தினாா்.

மகளிா் பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங்-எகிப்தின் நூா் ஹெய்கல் ஆட்டத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா். டை பிரேக்கரில் 7-6 என வென்றாா் அனாஹத் சிங்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நம்பா் 1 வீரா் அபய் சிங் எகிப்தின் இளம் வீரா் ஆடம் ஹவாலை சந்தித்தாா். இதில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றாா் அபய் சிங். இதன் மூலம் முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

மற்றொரு அரையிறுதியில் ஜப்பான்-ஹாங்காங் அணிகள் மோதின. இதில் ஹாங்காங் அணி 0-2 என முதலிரண்டு கேம்களை இழந்தது.

பின்னா் போராடி வென்று 2-2 என சமன் செய்தது. வெற்றிகளின் அடிப்படையில் ஹாங்காங் இறுதிக்கு தகுதி பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இறுதி, மூன்றாவது இடத்துக்கானஆட்டங்கள் நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com