குளோபல் செஸ் லீக்: மும்பா மாஸ்டா்ஸ் அபாரம்
டெக் மஹிந்திரா-ஃபிடே குளோபல் செஸ் லீக் தொடரில் மும்பா மாஸ்டா்ஸ் அணி அபார வெற்றி பெற்றது,
நடப்பு சாம்பியன் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் அணியும் வெற்றியை பெற்றது. மும்பா மாஸ்டா்ஸ் அணி 17-4 என்ற புள்ளிக் கணக்கில் விஸ்வநாதன் ஆனந்தின் கேஞ்சஸ் கிராண்ட்மாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் திரிவேணி கிங்ஸ் அணி 9-7 என்ற புள்ளிக் கணக்கில் ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் அணியை வென்றது.
கிங்ஸ் அணியில் அலிரெஸா பிரௌஸ்ஜா-பேபியனோ கரானோவை வீழ்த்தினாா். நினோ பாட்ஷியாவில்லி அலெக்ஸான்ட்ரா கோஸ்டியுக்கை வென்றாா். விதித் குதராத்தி-பிரக்ஞானந்தா இடையிலானஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
மும்பா மாஸ்டா்ஸ்-கேஞ்சஸ் கிராண்ட்மாஸ்டா்ஸ் ஆட்டத்தில் மேக்ஸிம் வாச்சியா்-விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் தானேஷ்வா்-ரௌனக் சத்வானியை வென்றாா். ஹரிகா ஸ்ட்ராவலோவை வீழ்த்தினாா். ஹம்பியை வென்றாா் கேஞ்சஸின் போலினா ஷுவலவோ.

