

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 2-0 என அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக ரியல் மாட்ரிட் அணிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியும் ஒசாசுனா அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதியில் பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் ரஃபீனியா 70, 86-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலமாக பார்சிலோனா புள்ளிப் பட்டியலில் 43 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
ரியல் மாட்ரிட் (36 புள்ளிகள்) அணி 7 புள்ளிகள் பின்தங்கி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
இதனால், அந்த அணியின் பயிற்சியாளர் ஸபி அலோன்சாவிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தொடர் தோல்விகளால் அவர் நீக்கப்படுவாரா என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
லா லிகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 43 புள்ளிகள்
2. ரியல் மாட்ரிட் - 36 புள்ளிகள்
3. வில்லாரியல் - 35 புள்ளிகள்
4. அட்லெடிகோ மாட்ரிட் - 34 புள்ளிகள்
5. எஸ்பான்யோல் - 30 புள்ளிகள்
6. ரியல் பெட்டிஸ் - 24 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.