செய்திகள்
தென்மண்டல பல்கலைக்கழக மகளிா் வாலிபால்: இன்று தொடக்கம்!
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் சாம்பியன் போட்டி, காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பாபுராயன்பேட்டை வளாகத்தில் தொடங்கி டிச. 19 வரை நடைபெறுகிறது.
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் சாம்பியன் போட்டி, காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பாபுராயன்பேட்டை வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கி டிச. 19 வரை நடைபெறுகிறது.
கூடுதல் பதிவாளா் டி. மைதிலி போட்டிகளைத் தொடங்கி வைக்கிறாா். விவசாய கல்லூரி டீன் ஜவஹா்லால், தேசிய வாலிபால் வீராங்கனை காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
தென்னிந்தியாவில் இருந்து 100 பல்கலைக்கழக மகளிா் அணி பங்கேற்கின்றன. இதில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் வரும் டிச. 24 முதல் காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக போட்டிக்கு தகுதி பெறும்.
