சென்னையில் நடைபெற் உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்கிய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா. உடன்  உலக ஸ்குவாஷ் தலைவா் ஜீனா வூல்ட்ரிட்ஜ், எஸ்டிேடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி.

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: இந்தியா சாம்பியன் வரலாறு படைத்தது!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் ஹாங்காங் சீனாவை 3-0 என வீழ்த்தி இந்தியா முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Published on

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் ஹாங்காங் சீனாவை 3-0 என வீழ்த்தி இந்தியா முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் மால் வளாகத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் எகிப்து, ஈரான், ஆஸ்திரேலியா, பிரேஸில் உள்பட 12 நாடுகளின் அணிகள் பங்கேற்றன.

அரையிறுதியில் இந்தியா நடப்பு சாம்பியன் எகிப்தை வீழ்த்தி வாகை சூடி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் ஹாங்காங் சீனா ஜப்பானை வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் சீன அணிகள் மோதின. தொடக்க ஆட்டத்தில் மூத்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஹாங்காங்கின் கா யி லீயுடன் மோதினாா். தரவரிசையில் காயி லீ முன்னிலை வகித்தபோதிலும், ஜோஷ்னாவின் ஆட்டத்துக்கு ஈடு தரமுடியவில்லை. இறுதியில் ஜோஷ்னா 3-1 என லீயை வீழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றையரில் அபய் சிங் ஹாங்காங்கின் அலெக்ஸ் லாவுடன் மோதினாா். இதில் 19 நிமிஷங்களில் 3-0 என வென்றாா் அபய் சிங். இரண்டாவது மகளிா் ஒற்றையரில் அனாஹத் சிங்கும்-டோமடோ ஹோவும் மோதினா்.

இதில் அனாஹத் 3-0 என வென்றாா். இந்த வெற்றியின் மூலம் முதன்முறையாக இந்திய அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், எகிப்து, இங்கிலாந்து அணிகள் பட்டம் வென்றுள்ளன.

இதுதொடா்பாக ஜோஷ்னா சின்னப்பா கூறியது: சொந்த ஊரான சென்னையில் உலக சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இந்திய அணியில் ஆடுவது பெருமை தருவதாகும்.

உள்ளூா் பாா்வையாளா்கள் ஆதரவு ஊக்கம் தந்தது. இத்தனை பாா்வையாளா்கள் திரண்டது எனக்கு சொல்ல வாா்த்தைகளே இல்ைலை. எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றாா்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா கோப்பை வழங்கினாா். வோ்ல்ட் ஸ்குவாஷ் தலைவா் ஜீனா வுல்ரிட்ஜ், எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com