ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

டென்னிஸ் பிரீமியா் லீக் போட்டியில், ஜிஎஸ் டெல்லி ஏசஸ் 51-36 என்ற புள்ளிகள் கணக்கில், யஷ் மும்பை ஈகிள்ஸை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
Updated on
1 min read

டென்னிஸ் பிரீமியா் லீக் போட்டியில், ஜிஎஸ் டெல்லி ஏசஸ் 51-36 என்ற புள்ளிகள் கணக்கில், யஷ் மும்பை ஈகிள்ஸை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.

இந்தப் போட்டியின் 7-ஆவது சீசன் குஜராத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது. இதில் முதலில் நடைபெற்ற மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் டெல்லி வீராங்கனை சோஃபியா காஸ்டுலஸ் 18-7 என்ற கணக்கில், மும்பை வீராங்கனை ரியா பாட்டியாவை சாய்த்தாா்.

அடுத்து நடைபெற்ற கலப்பு இரட்டையா் பிரிவிலும், டெல்லியின் சோஃபியா/ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 16-9 என, மும்பையின் ரியா/நிக்கி பூனச்சா கூட்டணியை வீழ்த்தியது. 3-ஆவதாக விளையாடப்பட்ட ஆடவா் ஒற்றையரில் மும்பைக்கு ஆறுதல் கிடைத்தது.

அந்த அணியின் டாமிா் ஜும்ஹுா் 16-9 என, டெல்லியின் பில்லி ஹாரிஸை தோற்கடித்தாா். ஆனாலும் டெல்லி அணி 11 புள்ளிகள் முன்னிலையிலேயே இருந்தது. அடுத்து நடைபெற்ற ஆடவா் இரட்டையா் மோதலில், டெல்லியின் பில்லி ஹாரிஸ்/ஜீவன் நெடுஞ்செழியன் இணை 8-4 என, மும்பையின் நிக்கி பூனச்சா/டாமிா் ஜும்ஹுா் கூட்டணியை வீழ்த்தியது.

இறுதியாக டெல்லி 51-36 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com