

டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா மீண்டும் டபிள்யூடிஏவின் இந்தாண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
80 சதவிகித வாக்குகளைப் பெற்று சபலென்கா முதலிடம் பிடித்துள்ளார். கடந்தாண்டும் சபலென்கா இந்த விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு சபலென்கா (27 வயது) யு.எஸ்.ஓபனை வென்று அசத்தினார். இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிவரை முன்னேறி அசத்தினார்.
இந்த சீசனில் டென்னிஸ் தரவரிசையில், சபலென்கா முதலிடத்தில் முடித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இருமுறை இந்த விருதை வென்றவர்கள் பட்டியலில் செரினா வில்லியம்ஸ், ஸ்வியாடெக் வரிசையில் சபலென்காவும் இணைந்துள்ளார்.
இந்த சீசனில் மட்டுமே சபலெக்னா, 63-12 வெற்றிகள், 4 பட்டங்கள், 9 இறுதிப் போட்டிகளில் முன்னேறி 15 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாகப் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.