

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டி.20 கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம், லக்னௌவில் புதன்கிழமை (டிச.17) நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது 2-1 என முன்னிலையில் இருக்கும்.
இந்தியா, இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியோ, இதில் வென்று தொடரில் தன்னைத் தக்கவைக்கும் திட்டத்துடன் வருகிறது.
இந்திய அணியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் பேட்டிங்கில் தடுமாறி வருவது அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.
கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம் சனை அணி நிர்வாகம் களமிறக்கலாம் என விவாதங்கள் உள்ளன. அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா என இதர பேட்டர்களும் இன்னும் இந்தத் தொடரில் வழக்கம்போல் பெரிதாக முத்திரை பதிக்கவில்லை. பௌலிங்கில் அக்ஸர் படேல் இடத்தில் குல்தீப் யாதவ் நீடிப்பார் எனத் தெரிகிறது.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பௌலிங்கில் பலம் சேர்க்க, ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே நம்பிக்கை அளிக்கின்றனர்.
கடந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த, குவின்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் தென்னாப்பிரிக்க பேட்டர்கள், இந்த ஆட்டத்தில் மீண்டு வரும் திட்டத்துடன் இருக்கின்றனர்.
பௌலிங்கில் லுங்கி இங்கிடி. மார்கோ யான்சென் உள்ளிட்டோர் இந்திய பேட்டர்களுக்கு சவால் அளிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.