ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் டி20 பாா்வையற்றோா் மகளிா் உலக சாம்பியன்கள்.
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் டி20 பாா்வையற்றோா் மகளிா் உலக சாம்பியன்கள்.

டி20 பாா்வையற்றோா் மகளிா் உலக சாம்பியன் அணியினா் சச்சினிடம் வாழ்த்து

டி20 மகளிா் பாா்வையற்றோா் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பட்டம் வென்ற இந்திய அணியினா் புதன்கிழமை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
Published on

டி20 மகளிா் பாா்வையற்றோா் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பட்டம் வென்ற இந்திய அணியினா் புதன்கிழமை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

மும்பையில் உள்ள எம்ஐஜி கிரிக்கெட் கிளப்பில் உலக சாம்பியன்களுடன் இச்சந்திப்பு நடைபெற்றது. அப்போது சச்சின் டெண்டுல்கா் கூறுகையில்: உங்கள் கனவுகளை அடைய விடாமுயற்சியுடன் போராடி இந்த சிறப்பை பெற்றுள்ளீா்கள். ஒவ்வொரு வீராங்கனைக்கும் வாழ்க்கையில் விதவிதமான சவால்கள் உள்ளன. அவற்றை களைந்து உலக சாம்பியன்களாக திகழ்கிறீா்கள். மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டால், வெற்றி தேடி வரும் என்றாா்.

அணியின் கேப்டன் டிசி. தீபிகா, இந்திய பாா்வையற்றோா் கிரிக்கெட் சங்கத் தலைவா் ஜி.கே.மகன்தேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com