

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், ஸ்கீட் சீனியா் கலப்பு அணிகள் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா, தா்ஷனா ராத்தோா் இணை புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.
ராஜஸ்தானை சோ்ந்த இவா்கள் கூட்டணி, இறுதிச்சுற்றில் 45-43 என்ற புள்ளிகள் கணக்கில், உத்தர பிரதேசத்தின் மைராஜ் அகமது கான், அரீபா கான் ஜோடியை சாய்த்து முதலிடம் பிடித்தது.
வெண்கலப் பதக்கச் சுற்றில், ஹரியாணாவின் ராய்ஸா தில்லன், இஷான் சிங் இணை 41-39 என, மத்திய பிரதேசத்தின் ரிதுராஜ் புந்தேலா, மான்சி ரகுவன்ஷி கூட்டணியை வீழ்த்தியது.
இதிலேயே ஜூனியா் கலப்பு அணிகள் பிரிவில், தெலங்கானாவின் யுவெக் பத்துலா, லாகு வெங்கட லக்ஷ்மி இணை 38-37 என்ற கணக்கில், மத்திய பிரதேசத்தின் ஜோதிராதித்ய சிசோடியா, வன்ஷிகா திவாரி கூட்டணியை வென்று தங்கத்தை தனதாக்கியது.
பஞ்சாபின் ஹா்மெஹா் சிங் லாலி, பா்மீத் கௌா் ஜோடி 40-39 என்ற வகையில், ராஜஸ்தானின் யஷஸ்வி ராத்தோா், யஷ்வா்தன் ரஜாவத் இணையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.
ஸ்கீட் சீனியா் ஆடவா் பிரிவில் குா்ஜோத் சிங், மைராஜ் அகமது கான், ஹா்மெஹா் லாலி ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். அதிலேயே ஜூனியா் பிரிவில் ஹா்மெஹா் லாலி, ஜோராவா் பேடி, ஜோதிராதித்ய சிசோடியா முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.