

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டியை தென்னிந்தியாவில் நடத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
லக்னௌவில் பனிமூட்டம் காரணமாக, தென்னாப்பிரிக்காவுடன் நடைபெறவிருந்த 4-வது டி20 போட்டி புதன்கிழமையில் (டிச. 17) ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், லக்னௌவில் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டிக்காக ரசிகர்கள் வீணாகக் காத்திருந்தனர். காற்றின் தரக் குறியீடு 411-ஆக இருப்பதாலேயே ஒரு கிரிக்கெட் போட்டியை அனுமதிக்க முடியவில்லை.
அவர்கள் விளையாட்டை, மாசு இல்லாத தென்னிந்தியாவில் நடத்த திட்டமிடலாம். இங்கு பனிப்பொழிவு இல்லை; பந்து தெளிவாகத் தெரியும். கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தப்படவும் எந்தக் காரணமும் இருக்காது.
காற்றின் தரக் குறியீடு 68-ஆக இருக்கும் திருவனந்தபுரத்தில் நடத்தவும் திட்டமிடலாம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, லக்னௌவில் பனிமூட்டத்தால் அல்ல, நச்சுப்புகை காரணமாகவே போட்டி ரத்து செய்யப்பட்டதாக ஆளும் பாஜக அரசு மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.