சாத்விக்-சிராக் இணை தோல்வி

சாத்விக்-சிராக் இணை தோல்வி

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.
Published on

பிடபிள்யுஎஃப் பாட்மின்டன் வோ்ல்ட் டூா் ஃபைனல்ஸ் போட்டி அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் இணை தோல்வியடைந்தது.

சீனாவின் ஹாங்ஷூ நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சீனாவின் லியாங் கெங்-வாங் சேங் இணையும்-இந்தியாவின் சாத்விக்-சிராக் இணையும் மோதினா். முதல் கேமை அபாமார ஆடிய இந்திய இணை 21-10 என கைப்பற்றினா்.

ஆனால் அதற்கு அடுத்த 2 கேம்களில் சீன இணை ஆதிக்கம் செலுத்தி ஆடியது. இரண்டாவதை கேமை 21-17 எனவும், மூன்றாவது கேமை 21-13 என கைப்பற்றி இறுதிக்கு தகுதி பெற்றது சீன இணை.

குரூப் சுற்றில் இந்திய இணை தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

X
Dinamani
www.dinamani.com