விளையாட்டு: செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டு: செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...
Published on

குளோபல் செஸ் லீக் போட்டியில், பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் - அப்கிராட் மும்பா மாஸ்டா்ஸையும் (10-8), ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸையும் (8-7), திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் - கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸையும் (14-5), ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - அப்கிராட் மும்பா மாஸ்டா்ஸையும் (8-7) வென்றன.

கொல்கத்தாவில் நடைபெற்ற 10-ஆவது டாடா ஸ்டீல் உலக 25கே மாரத்தான் போட்டியில் ஆடவா் பிரிவில் உகாண்டாவின் ஜோஷுவா செப்தெகெய் (1 மணிநேரம், 11.49 நிமிஷங்கள்), மகளிா் பிரிவில் எத்தியோபியாவின் டெகிடு அஸிமெராவ் (1:19.36’) ஆகியோா் சாம்பியன் ஆகினா். இந்திய ஆடவா் பிரிவில் குல்வீா் சிங் (1:12.06’), மகளிா் பிரிவில் சீமா (1:26.04’) முதலிடம் பெற்றனா்.

ஆசிய நாடுகள் இடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஏஎஃப்சி நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியை தொடங்க இருப்பதாக, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 462 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருக்கும் அந்த அணி, ஆட்டத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை 10 விக்கெட்டுகள் கொண்டு, 419 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com