

லாலிகா தொடரில் பார்சிலோனா அணி வில்லாரியல் அணியை 2-0 என வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் மூலமாக தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ரியல் மாட்ரிட் அணியுடனான தோல்விக்குப் பிறகு, பார்சிலோனா அணி தொடர்ச்சியாக வென்று வருகிறது.
நேற்றிரவு வில்லாரியல் அணியுடன் 2-0 என வென்றது. இந்தப் போட்டியில் ரஃபீனியா 12-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார்.
அடுத்ததாக, லாமின் யமால் 63-ஆவது நிமிஷத்தில் கோல் அடுத்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் பார்சிலோனாவின் கோல் கீப்பர் ஜான் கார்சியா மிகவும் சிறப்பாக விளையாடி பல கோல்களை தடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
லாலிகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 46 புள்ளிகள்
2. ரியல் மாட்ரிட்- 42 புள்ளிகள்
3. அத்லெடிகோ மாட்ரிட் - 37 புள்ளிகள்
4. வில்லா ரியல் - 35 புள்ளிகள்
5. எஸ்பானியோல் - 30 புள்ளிகள்
6. ரியல் பெட்டிஸ் - 28 புள்ளிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.