

பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் தனது இடது முட்டியில் சிறிய அறுவைச் சிகிச்சையை முடித்துள்ளார்.
ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
33 வயதாகும் பிரேசில் அணியின் முன்னாள் கேப்டன் நெய்மர் தனது இடது முட்டியின் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்துள்ள இவர் சமீப காலமாகவே காயத்தினால் அவதியுற்று வருகிறார்.
இருப்பினும் தனது சிறுவயது கிளப் அணியான சன்டோஷ் அணியில் காயத்துடனே விளையாடி அந்த அணியை ரிலிகேஷனில் இருந்து காப்பாற்றினார்.
கடைசி மூன்று போட்டிகளில் நெய்மர் சிறப்பாக விளையாடியது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தண்டு ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரேசில் அணி தகுதி பெற்றுள்ளது.
இதுவரை அதிகமுறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணி தனது 6ஆவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
நெய்மர் மீண்டும் தேசிய அணிக்கு வந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை அளித்திருந்தாலும் அடுத்த மூன்று மாதங்கள் அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சன்டோஷ் கிளப்பில் நெய்மர் 8 கோல்கள் அடித்திருந்தார். அவரது தலைமையில் பிரேசில் அணி உலகக் கோப்பை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.