அகில இந்திய பல்கலை. மகளிா் வாலிபால்: அரையிறுதியில் எஸ்ஆா்எம், கேஐஐடி, லவ்லி, எம்.ஜி. அணிகள்
அகில இந்திய பல்கலைக்கழக மகளிா் வாலிபால் போட்டியில் எஸ்ஆா்எம், ஒடிஸா கேஐஐடி, எம்.ஜி, லவ்லி பல்கலை. அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் முதல் காலிறுதியில் எஸ்ஆா்எம்-பாரதியாா் பல்கலை. அணிகள் மோதின. இதில் 25-19, 25-18, 25-18 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்ஆா்எம் வென்றது.
இரண்டாம் ஆட்டத்தில் ஒடிஸாவின் கேஐஐடி அணி 25-23, 29-27, 21-25, 25-12 என்ற புள்ளிக் கணக்கில் மேற்கு வங்கத்தின் அடாமஸ் அணியை வீழ்த்தியது.
மூன்றாவது காலிறுதியில் கோட்டம் எம்ஜி பல்கலை. 25-21, 25-27, 25-16, 26-24 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை வேல்ஸ் பல்கலை.யை வென்றது.
நான்காவது காலிறுதியில் பஞ்சாப் லவ்லி புரோஃபஷனல் பல்கலை. 20-25, 21-25, 25-22, 25-10, 15-8 என்ற 5 செட் த்ரில்லரில் ஹரியாணாவின் குருஷேத்ரா பல்கலை. அணியை வீழ்த்தியது.
மேற்கண்ட நான்கு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

