மங்களூரு-எஸ்.,ஆா். பல்கலைக்கழக அணியினா்.
மங்களூரு-எஸ்.,ஆா். பல்கலைக்கழக அணியினா்.

தென்மண்டல பல்கலை. ஆடவா் கூடைப்பந்து: உஸ்மானியா, விஐடி, பாரதிதாசன் வெற்றி

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் உஸ்மானியா, விஐடி, பாரதிதாசன் அணிகள் தொடக்க வெற்றி பெற்றன.
Published on

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் உஸ்மானியா, விஐடி, பாரதிதாசன் அணிகள் தொடக்க வெற்றி பெற்றன.

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டி வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதல் நாள் ஆட்டங்களில் வென்ற அணிகள்:

ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் 77-18 என பாகல்கோட்டை பல்கலையையும், அப்துல் கலாம் பல்கலை. 79-22 என விக்ரமா சிம்ஹாபுரி பல்கலையையும், உஸ்மானியா பல்கலை. 44-35 என மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலையையும், கேரள வேளாண் பல்கலை. 40-35 என காரைக்குடி அழகப்பா பல்கலையையும் வென்றன.

விஐடி, வேலூா் 44-41 என கேரள சுகாதார பல்கலைக்கழகத்தையும், என்ஐடிடிஐ பல்கலை 59-6 என நல்கொண்டா மகாத்மா காந்தி பல்கலையையும், மங்களூரு பல்கலை. 54-17 என எஸ்.ஆா். பல்கலையையும், பாரதிதாசன் பல்கலை. 70-24 என கா்நாடக வேளாண் அறிவியல் பல்கலையையும், சத்வஹனா பல்கலை. 40-37 என தமிழக மத்திய பல்கலையையும் வென்றன.

X
Dinamani
www.dinamani.com