~சாம்பியன் பட்டம் வென்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் அணி.
~சாம்பியன் பட்டம் வென்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் அணி.

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

Published on

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் வாலிபால் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற்ற இப்போட்டியின் அரையிறுதியில் எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் பஞ்சாப்பின் லவ்லி புரோபஷனல் பல்கலையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் புவனேசுவரம் கேஐஐடி பல்கலை. 3-1 என்ற செட் கணக்கில் கோட்டயம் எம்ஜி. பல்கலையை வென்றது.

இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் கேஐஐடி பல்கலை அணியை வீழ்த்தியது. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் எம்ஜி. பல்கலை 3-1 என லவ்லி புரோபஷனல் பல்கலையை வென்றது.

X
Dinamani
www.dinamani.com