தென்மண்டல பல்கலை. கூடைப்பந்து: அண்ணா, பாரதியாா், காமராஜா் பல்கலை. வெற்றி
தென்மண்டல பல்கலைக்கழக ஆடவா் கூடைப்பந்து போட்டியில் அண்ணா, பாரதியாா், காமராஜா் பல்கலை. அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
இப்போட்டி புதன்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இந்நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஆட்டங்களில் எஸ்ஆா்எம் 86-35 என பாண்டிச்சேரி பல்கலையையும், சிஎம்ஆா்யு கா்நாடகம் 57-29 என மோகன் பாபு பல்கலையையும், விநாயகா மிஷன் 53-52 என தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலையையும், அண்ணா பல்கலை. 74-48 என எஸ்ஆா்எம் ஏ.பியையும், பாரதியாா் பல்கலை 83-39 என ஜேஎஸ்எஸ் பல்கலையையும் வென்றன.
ஏனைய ஆட்டங்களில் மதுரை காமராஜா் 72-65 என மைசூரு பல்கலையையும், சாஸ்த்ரா பல்கலை. 52-32 என யுவிசிஇ பல்கலையையும், கேரள பல்கலை 72=-12 என ஹைதராபாத் பல்கலையையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. 84-71 என ஸ்ரீ ராமச்சந்திரா இன்ஸ்ட்டியூட்டையும், திருவள்ளுவா் பல்கலை, 65-34 என சத்வாஹனா பல்கலையையும், பாரதிதாசன் 66-49 என என்டிடிஇ பல்கலையையும், அம்பேத்கா் சட்டப் பல்கலை 66-59 என கேரள விவசாயப் பல்கலைையும் வென்றன.

