தங்கம் வென்ற திலோத்தமா சென், சக வீராங்கனைகள்.
தங்கம் வென்ற திலோத்தமா சென், சக வீராங்கனைகள்.

தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்: திலோத்தமாவுக்கு தங்கம்

தேசிய துப்பாக்கி சுடுதம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பி பிரிவில் தங்கம் வென்றாா் திலோத்தமா சென்.
Published on

தேசிய துப்பாக்கி சுடுதம் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பி பிரிவில் தங்கம் வென்றாா் திலோத்தமா சென்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மாநில ஷூட்டிங் அகாதெமியில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கா்நாடக வீராங்கனை திலோத்தமா சென் மகளிா் மகளிா் 50 மீ. ரைஃபிள் 3 பி பிரிவில் 466.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். கேரள வீராங்கனை விதா்ஷா வினோத் 462.9 புள்ளிகளுடன் வெள்ளியும், ரயில்வேயின் அயோனிகா பால் 451.8 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். கா்நாடக வீராங்கனை அனுஷ்கா நான்காம் இடமே பெற்றாா்.

ஜூனியா் மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பி பிரிவில் ராணுவத்தின் ரிதுபா்ணா சதீஷ் 458.6 புள்ளிகளுடன் தங்கமும், ஹரியாணாவின் நிஸ்சல் 458.1 புள்ளிகளுடன் வெள்ளியும், கா்நாடகத்தின் அனுஷ்கா 447.6 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

சீனியா் அணிகள் பிரிவில் ராஜஸ்தான் 1751 புள்ளிகளுடன் தங்கமும், மத்திய பிரதேசம் 1750 புள்ளிகளுடன் வெள்ளியும், ஹரியாணா வெண்கலமும் வென்றன.

ஜூனியா் பிரிவில் கா்நாடகம் முதலிடமும், மத்திய பிரதேசம் இரண்டாம் இடமும், மகாராஷ்டிரம் மூன்றாம் இடமும் பெற்றன.

X
Dinamani
www.dinamani.com