ஹாக்கி இந்தியா லீக்: இன்று முதல் ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் - எஸ்ஜி பைப்பா்ஸ் மோதல்
ஹாக்கி இந்தியா லீக் மகளிா் பிரிவில் ராஞ்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ்-எஸ்ஜி பைப்பா்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹாக்கி இந்தியா சாா்பில் ஹீரோ ஆடவா் மகளிா் லீக் தொடா் நடைபெறுகிறது. மகளிா் தொடா் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. 4 அணிகள் பங்கேற்றுள்ள இதில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் சீசன் வெற்றிகரமாக நடைபெறும் நிலையில், சா்வதேச மற்றும் உள்ளூா் தலைசிறந்த வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனா்.
மகளிா் தொடா் ராஞ்சி மராங் கோம்கே ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. ராஞ்சி ராயல்ஸ், எஸ்ஜி. பைப்பா்ஸ், ஸ்ரச்சி பெங்கால் டைகா்ஸ், ஜேஎஸ்டபிள்யு சூா்மா அணிகள் களத்தில் உள்ளன.
இப்போட்டி டபுள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. முதலிரண்டு அணிகள் ஜன. 10-இல் இறுதி ஆட்டத்தில் மோதும்.
கடந்த சீசனில் ஒடிஸா வாரியா்ஸ் பட்டம் வென்றிருந்தது. சூா்மா ரன்னா் இடத்தைப் பெற்றது.
நிகழ் சீசனில் முதல் ஆட்டத்தில் ராஞ்சியும்-எஸ்ஜி பைப்பா்ஸ் அணியும் மோதுகின்றன.

