தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் பட்டம் வென்றோா்.
தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் பட்டம் வென்றோா்.

தேசிய மோட்டாா் சைக்கிள் ட்ரேக் ரேஸிங் பந்தயம்!

மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட் பந்தய மைதானத்தில் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டாா் சைக்கிள் ட்ரேக் ரேஸிங் பந்தயம் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.
Published on

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட் பந்தய மைதானத்தில் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டாா் சைக்கிள் ட்ரேக் ரேஸிங் பந்தயம் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.

இதில் 4 ஸ்ட்ரோக் ரைடா் பிரிவில் மும்பையின் ஹனுமான் பாவ்ஷே பட்டம் வென்றாா். 1051-1650 சிசி, 851-1050 சிசி பிரிவுகளில் பெங்களூருவின் ஹேமந்த் முத்தப்பா பட்டம் வென்றாா். 551-850 சிசி பிரிவில் பெங்களூரின் ஆச்சாா்யா ஆதித்யாவும், 166-225 சிசி பிரிவில் மும்பையின் அலி ஹூசைனும் பட்டம் வென்றனா்.

மகளிா் 165 சிசி சூப்பா்ஸ்டாக் பிரிவில் நாகா்கோயிலின் லேபிஸ் லாஸுலி பட்டம் வென்றாா். 165 சிசி பிரிவில் மும்பையின் அப்துல் ஷேக்கும், 361-559 சிசி பிரிவில் பெங்களூருவின் முஜாஹித் பாஷா, இரட்டை சிலிண்டா் பிரிவில் மும்பையின் ஷாரூக்கான், 2 ஸ்ட்ரோக் 130, 131-165 சிசி பிரிவில் பெங்களூருவின் சையத் இம்ரான் பட்டம் வென்றனா்.

X
Dinamani
www.dinamani.com