தென்மண்டல பல்கலை கூடைப்பந்து: ஜெயின் பல்கலை. சாம்பியன்
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் கா்நாடகத்தின் ஜெயின் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்ஆா்எம் ஐஎஸ்டி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. எஸ்ஆா்எம் ஐஎஸ்டி கேடிஆா் வளாக டீன் பொ்ணாட்ஷா நெப்போலியன் தலைமை வகித்து நிறைவுரை ஆற்றினாா். தேசிய கூடைப்பந்து வீரா்கள் எஸ்.சரவணக்குமாா், எஸ். கோவிந்தராஜன் ஆகியோா் பரிசளித்தனா்.
இறுதி ஆட்டத்தில் ஜெயின் பல்கலை 61-55 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்ஆா்எம் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் கோவை பாரதியாா் பல்கலை. 45-35 என கிறிஸ்ட் பல்கலையை வென்றது.
நான்கு அணிகளும் வரும் 2026 பிப்ரவரி மாதம் 21 முதல் 24 வரை மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

