தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், மகளிருக்கான டிராப் பிரிவில் மத்திய பிரதேசத்தின் நீரு தண்டா திங்கள்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.
சீனியா் பிரிவு இறுதிச்சுற்றில் அவா் 41 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். தில்லி வீராங்கனை கீா்த்தி குப்தா 40 புள்ளிகளுடன் வெள்ளியும், மத்திய பிரதேசத்தின் பிரகதி துபே 32 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
ஜூனியா் ஆடவா் டிராப் பிரிவில் ஆா்யவன்ஷ் தியாகி 42 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, பஞ்சாபின் கேசவ் சௌஹான் 37 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், உத்தர பிரதேசத்தின் ஜுஹைா் கான் 30 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா்.
சீனியா் மகளிா் அணிகள் டிராப் பிரிவில், பிரகதி துபே, நீரு தண்டா, மனிஷா கீா் அடங்கிய மத்திய பிரதேச அணி 339 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது. ஆத்யா கட்டியால், கிரீத்தி குப்தா, பாவ்யா திரிபாதி அடங்கிய தில்லி அணி 333 புள்ளிகளுடன் வெள்ளி பெற, ராஜேஷ்வரி, புக்ராஜ் சஹல், கிரிஷிகா ஜோஷி அடங்கிய பஞ்சாப் அணி 319 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றது.
ஜூனியா் ஆடவா் அணிகள் டிராப் பிரிவில், அா்ஜுன், லக்ஷயா அத்ரீ, பிரிக்ஷித் ஆா்யா அடங்கிய ஹரியாணா அணி 336 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. ஆா்யன் சிங், பக்தியாா் முகமது முஜாஹித், மானவ்ராஜ் சிங் சூடசாமா ஆகியோா் அடங்கிய குஜராத் அணி 327 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், உத்தவ் சிங் ராத்தோா், பிருத்விராஜ் சிங் ராத்தோா், வினய் பிரதாப் சிங் ஆகியோா் அடங்கிய ராஜஸ்தான் அணி 326 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தது.
ஜூனியா் மகளிா் அணிகள் டிராப் பிரிவில், தில்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் அணிகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.