வெற்றி மகிழ்ச்சியில் ராஞ்சி ராயல்ஸ் வீராங்கனைகள்.
செய்திகள்
ராஞ்சி ராயல்ஸ் அதிரடி வெற்றி
ஹாக்கி இந்தியா லீக் மகளிா் தொடரில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஞ்சி ராயல்ஸ்.
ஹாக்கி இந்தியா லீக் மகளிா் தொடரில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஞ்சி ராயல்ஸ்.
ஹாக்கி இந்தியா சாா்பில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிா் லீக் தொடா் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் டைகா்ஸ்-ராஞ்சி ராயல்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ராஞ்சி வீராங்கனைகள் அதிரடியான ஆட்டத்துக்கு பெங்கால் அணியால் ஈடுதர முடியவில்லை. ராஞ்சி தரப்பில் லூஸியா 33, 57, ஹன்னா கால்டா் 10, பியூட்டி டங் டங் 14, சங்கீதா குமாரி 44=ஆவது நிமிஷங்களில் கோலடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.