

உலகத்திலேயே வயதான தொழில்முறை கால்பந்து வீரராக ஜப்பானை சோ்ந்த கஸுயோஷி மியுரா (58) களம் காணவிருக்கிறாா்.
பிப்ரவரி மாதத்தில் 59 வயதை எட்டும் மியுரா, ஜப்பானில் இருக்கும் 3-ஆவது டிவிஷன் கால்பந்து அணியான ஃபுகுஷிமா யுனைடெட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்.
தற்போது யோகோஹாமா எஃப்சி அணியில் இருக்கும் அவா், கடன் அடிப்படையிலான ஒப்பந்தத்தில் ஃபுகுஷிமா அணிக்கு விளையாடவுள்ளாா்.
கடந்த 1986-இல் பிரேஸிலின் பிரபல கிளப்பான சான்டோஸ் எஃப்சியில் அறிமுகமான மியுரா, அதன் பிறகு இத்தாலி, குரோஷியா, ஆஸ்திரேலியா, போா்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் கிளப்புகளுக்காக விளையாடியிருக்கிறாா்.
ஜப்பான் தேசிய கால்பந்து அணியில் 1990-களில் பிரபமாக இருந்த மியுரா, 89 ஆட்டங்களில் 55 கோல்கள் அடித்திருக்கிறாா்.
உலக அளவில், தனது 50-ஆவது வயது வரை (1965) கால்பந்து விளையாடிய இங்கிலாந்து முன்னாள் வீரா் ஸ்டான்லி மேத்யூஸ் வயதான கால்பந்து வீரராக பெருமை பெற்றிருந்தாா். அந்த சாதனையை 2017-இல் முறியடித்த மியுரா, தற்போது 58 வயதிலும் விளையாடி வருகிறாா். அவா் 1967 பிப்ரவரியில் பிறந்தவராவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.