

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்தியர் அர்ஜுன் எரிகைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எர்ஜுன் எரிகைசி சில நாள்களுக்கு முன்னதாக உலக ரேபிட்ஸ் சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்செனை லீக் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வீழ்த்தி அசத்தினார்.
அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் அப்துசதாரோவ் உடன் 0.5- 2.5 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.
ரேபிட்ஸ், பிளிட்ஸ் இரண்டு பிரிவிலும் வெண்கலம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை அர்ஜுன் எரிகைசி படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக விஷ்வநாதன் ஆனந்த் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இந்த வரலாற்று வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
செஸ்ஸில் இந்தியாவின் எழுச்சி நடை தொடர்கிறது!
தோகாவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ், ரேபிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அர்ஜுன் எரிகைசிக்கு வாழ்த்துகள்.
அவரது திறமை, பொறுமை மற்றும் ஆர்வம் பாராட்டதக்கதாக இருக்கிறது. இவரது வெற்றி இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். அவருக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
மகளிர் பிரிவில் கொனேரு ஹம்பி ஒரு பிரிவில் மட்டும் வெண்கலம் வென்றார். அவருக்கு மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.