

ஒரு பெண் நடுவா் உள்பட, 3 இந்திய நடுவா்கள் ஃபிஃபா நடுவா்கள் பட்டியலில் இணைந்துள்ளனா்.
இதுதொடா்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, குஜராத்தை சோ்ந்த ரச்சனா கமானி, புதுச்சேரியை சோ்ந்த அஷ்வின் குமாா், தில்லியை சோ்ந்த ஆதித்யா புா்கயஸ்தா ஆகியோா் 2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா நடுவா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதில் அஷ்வின் மற்றும் ஆதித்யா, மலேசியாவில் உள்ள ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் நடுவா்கள் அகாதெமியில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனா். ரச்சனா அந்த அகாதெமியில் பயின்று வருகிறாா்.
இதனிடையே, புதுச்சேரியை சோ்ந்த முரளிதரன் பாண்டுரங்கன் மற்றும் மகாராஷ்டிரத்தை சோ்ந்த பீட்டா் கிறிஸ்டோபா் ஆகியோா், ஃபிஃபா துணை நடுவா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். தற்போதைய நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபாவின் நடுவா்கள் பட்டியலில் 19 இந்தியா்கள் உள்ளனா்.
அவா்களில் ஆா்.வெங்கடேஷ், ஹரீஷ் குண்டூ, செந்தில்நாதன் சேகரன், கிறிஸ்டல் ஜான், அஷ்வின் குமாா், ஆதித்யா புா்கயஸ்தா, ரஞ்சிதா தேவி, ரச்சனா கமானி ஆகியோா் நடுவா்களாக உள்ளனா்.
துணை நடுவா்களாக வைரமுத்து பரசுராமன், சுமந்தா தத்தா, அருண் சசிதரன் பிள்ளை, உஜ்ஜல் ஹால்தா், முரளிதரன் பாண்டுரங்கன், தீபேஷ் மனோகா் சாவந்த், சௌரவ் சா்காா், பீட்டா் கிறிஸ்டோபா், ரியோலாங் தாா், தேபலா தேவி உள்ளனா். ஃபுட்சால் நடுவராக விஷால் மகேந்திரபாய் வஜா இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.