
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை இறுதி நேரத்தில் ரியல் மாட்ரிட் வீழ்த்தி அசத்தியது.
சாம்பியன்ஸ் லீக் பிளே -ஆஃப் லெக் 1 போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.
முதல் பாதியில் அசத்திய மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டாம் பாதியில் சொதப்பியது. குறிப்பாக கோல் கீப்பர் செய்த சிறிய சிறிய தவறுகளால் அந்த அணி தோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டியின் துவக்கத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி ரசிகர்கள் வினிசியஸ் ஜூனியரையும் ரியல் மாட்ரிட் அணியினரையும் கிண்டல் செய்யும் விதமாக பேலன்தோர் (தங்கப் பந்து) விருது கிடைக்காததால் அழுவதை நிறுத்துங்கள் எனக் கூறிய வாசகங்களுடன் ரோட்ரி தங்கப் பந்தினை முத்தமிடும் புகைப்படம் அச்சிடப்பட்ட பேனரை காட்டினார்கள்.
எர்லிங் ஹாலண்ட் 2 கோல்கள் ( 19’, 80’ ) அடித்தார். ரியல் மாட்ரிட் அணியில் கிளியன் எம்பாப்வே (60’), பிரஹிம் டியாஜ் (86’), ஜூட் பெல்லிங்ஹாம் (90+2’) கோல் அடித்து அசத்தினார்கள்.
கூடுதல் நேரத்தில் ரியல் மாட்ரிட் கோல் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள்.
3-2 வென்ற ரியல் மாட்ரிட் அணியில் வினிசியஸ் ஜூனியர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2 கோல்கள் அடிக்க உதவினார். 5 வாய்ப்புகளை உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் சிட்டி ரசிகர்களின் எதிர்ப்பு தன்னை மேலும் ஊக்கப்படுத்தியதாக போட்டி முடிந்த பிறகு வினிசியஸ் ஜூனியர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.