பிசிசிஐ புதிய செயலாளர் யார்?

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய செயலாளர் தேர்வு
பிசிசிஐ புதிய செயலாளர் யார்?
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால், செயலாளர் பதவிக்கு தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கிரிக்கெட், சட்டம், நிர்வாகம் எனப் பன்முகத் திறன் கொண்டவர்.

இவரது கிரிக்கெட் வாழ்க்கை, ஒப்பீட்டளவில் குறுகியதாக இருந்தபோதிலும், முதல்தர கிரிக்கெட் வீரராகவே இருந்து வந்தார். கிரிக்கெட்டுக்குப் பிறகு, 28 வயதில் குவஹாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

தேவஜித் சைக்கியா (கோப்புப் படம்)
தேவஜித் சைக்கியா (கோப்புப் படம்)X | Devajit Saikia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியாவின் செயல்திறன் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டதுதான், தேவஜித்தின் முதல் செயலாளர் பணியாக இருந்தது. இந்த விவாதக் கூட்டத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மாவும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சரிவு குறித்துதான் இந்தக் கூட்டத்தில் நீண்ட விவாதமாக இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அணி வலுவாக இருந்தபோதிலும், இந்திய பேட்ஸ்மேன்களால் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதை நிர்வாகம் புரிந்து கொள்ள விரும்பியது. முக்கிய காரணங்களை அடையாளம் காண்பதிலும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்று விவாதிக்கப்பட்டதாகவும், சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் விவாதத்தில் கூறப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com