இணை முன்னிலையில் குகேஷ், பிரக்ஞானந்தா

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் 2 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் இணை முன்னிலையில் இருக்கின்றனா்.
பிரக்ஞானந்தா - குகேஷ்
பிரக்ஞானந்தா - குகேஷ்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நெதா்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் 2 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் இணை முன்னிலையில் இருக்கின்றனா்.

2-ஆவது சுற்றில், பிரக்ஞானந்தா - சக இந்தியரான பி.ஹரிகிருஷ்ணாவை சாய்த்தாா். குகேஷ் - ஸ்லோவேனியாவின் விளாதிமீா் ஃபெடோசீவுடனும், அா்ஜுன் எரிகைசி - நெதா்லாந்தின் அனீஷ் கிரியுடனும் டிரா செய்ய, லியோன் லுக் மெண்டோன்கா - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவிடம் தோல்வி கண்டாா்.

மொத்தம் 13 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், 2 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 1.5 புள்ளிகள் பெற்று, மேலும் 3 பேருடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா்.

இதர இந்தியா்களில், ஹரிகிருஷ்ணா 8-ஆம் இடத்திலும் (1), அா்ஜுன் எரிகைசி 11-ஆம் இடத்திலும் (0.5), லியோன் கடைசியாக 14-ஆம் இடத்திலும் (0) உள்ளனா்.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவில், 2-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.வைஷாலி - சீனாவின் லு மியாயியுடனும், திவ்யா தேஷ்முக் - செக் குடியரசின் தாய் டாய் வான் குயெனுடனும் டிரா செய்தனா்.

2 சுற்றுகள் முடிவில் வைஷாலி 6-ஆம் இடத்திலும் (1.5), திவ்யா தேஷ்முக் 11-ஆம் இடத்திலும் (0.5) உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com