டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவமதிப்பு! மன்னிப்பு கோரிய வர்ணனையாளர்

டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவமதிப்பு! மன்னிப்பு கோரிய நிகழ்ச்சி தொகுப்பாளர்
டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவமதிப்பு! மன்னிப்பு கோரிய வர்ணனையாளர்
Published on
Updated on
1 min read

24 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சை அவமதிக்கும் விதத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஜோகோவிச் களம் கண்ட டென்னிஸ் போட்டியைக் கண்டுகளிக்க செர்பிய ரசிகர்கள் ஏராளமானோர் மெல்போர்ன் பார்க் திடலில் திரண்டிருந்தனர். அவர்கள் கைகளில் செர்பிய கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கோகோவிச்சை உற்சாகப்படுத்தியதையும் காண முடிந்தது.

அப்போது போட்டி வர்ணனையில் ஈடுபட்டிருந்த பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக உள்ள டோனி ஜோன்ஸ் “நோவக் அளவுக்கதிகமாக தலைக்குமேல் தூக்கி வைக்கப்பட்டு சிலாகித்து பேசப்படுகிறார். அவரை வெளியேற்ற வேண்டும்” என்று பொருள்பட ஒரு பாடலைப் பாடி கேலி செய்தார்.

இதனைக் கேட்ட பின், டென்னிஸ் திடலிலிருந்த செர்பிய ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் முகம் கோணலானது. இவ்விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், போட்டி முடிந்ததும் டென்னிஸ் திடலில் பேட்டியளிக்க மறுத்துவிட்டார். இது பரபரப்பாக பேசப்பட்டது.

அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். டோனி ஜோன்ஸ் தன்னையும் செர்பிய நாட்டு ரசிகர்களையும் அவமதிக்கும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்து தங்களைக் காயப்படுத்திவிட்டதாகவும், இதனையடுத்து அவருக்கெதிரான எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் தான் பேட்டியளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

டோனி ஜோன்ஸ் தான் பேசிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கும் வரை தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டியளிக்கப் போவதில்லை என்பதை ஜோகோவிச் தெளிவுபடுத்தியுள்ளார்.

“வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்ட கருத்துகள் நகைப்புக்குரிய விதத்தில் வேடிக்கையாகச் சொல்லப்பட்டவை. இந்த நிலையில், நான் தெரிவித்த கருத்துகள் ஜோகோவிச் தரப்பிடம் எதிர்மறையாக சென்றடைந்திருப்பதாக” வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் டோனி ஜோன்ஸ்.

இந்த நிலையில், தன்னால் ஜோகோவிச் தரப்பினர் வருத்தமடைந்திருக்கும் தகவல் சனிக்கிழமையன்று தனக்கு தெரிய வந்தததையடுத்து, ஜோகோவிச் தரப்பிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக திங்கள்கிழமை தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்துள்ளார் டோனி ஜோன்ஸ். இது துரதிருஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com