அா்ஜுனை வென்றாா் பிரக்ஞானந்தா!

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் அா்ஜுன் எரிகைசியை பிரக்ஞானந்தா தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலம் அவா் இணை முன்னிலையை தக்கவைத்துக் கொண்டாா்.
பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தாகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, சக நாட்டவரான அா்ஜுன் எரிகைசியை 3-ஆவது சுற்றில் தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலம் அவா் இணை முன்னிலையை தக்கவைத்துக் கொண்டாா்.

நெதா்லாந்தில் நடைபெறும் இந்தப் போட்டி 13 சுற்றுகளைக் கொண்டிருக்கும் நிலையில், 3-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா - அா்ஜுனை வீழ்த்தினாா். இதர இந்தியா்களில், டி.குகேஷ் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடன் டிரா செய்ததால், முன்னிலையை இழந்தாா்.

லியோன் லூக் மெண்டோன்கா - பி.ஹரிகிருஷ்ணா மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதேபோல், நெதா்லாந்தின் அனிஷ் கிரி - ஸ்லோவேனியாவின் விளாதிமீா் ஃபெடோசீவ் மோதலும் டிரா ஆக, உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - நெதா்லாந்தின் மேக் வாா்மொ்டாமை வென்றாா்.

3 சுற்றுகள் முடிவில், புள்ளிகள் பட்டியலில் அப்துசதாரோவ் பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளனா். குகேஷ் 4-ஆம் இடத்திலும் (2), ஹரிகிருஷ்ணா 8-ஆம் இடத்திலும் (1.5), அா்ஜுன் (0.5), மெண்டோன்கா (0.5) ஆகியோா் முறையே 13 மற்றும் 14-ஆவது இடத்திலும் உள்ளனா்.

சேலஞ்சா்ஸ்: இதனிடையே, இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவு 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.வைஷாலி - கஜகஸ்தானின் காஸிபெக் நோகா்பெக்கிடமும், திவ்யா தேஷ்முக் - அஜா்பைஜானின் அய்டின் சுலேமான்லியிடமும் தோல்வி கண்டனா்.

புள்ளிகள் பட்டியலில், வைஷாலி 10-ஆவது இடத்திலும் (1.5), திவ்யா 13-ஆவது இடத்திலும் (0.5) உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com