பழைய அணிக்கே திரும்பும் நெய்மர்..! சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேற்றம்!

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.
நெய்மர்
நெய்மர்படங்கள்: எக்ஸ் / அல்-ஹிலால், நெய்மர்.
Published on
Updated on
1 min read

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.

சௌதி அரேபிய கிளப் அல்-ஹிலால் உடனான ஒப்பந்தம் இருவரின் சம்மதத்துடன் இன்று (ஜன.25) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதாகும் பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்குப் பிறகு அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார்.

தொடர்ச்சியான காயங்கள் மட்டும் ஆகவில்லையெனில் உலகின் தலைசிறந்த வீரராகியிருப்பார். அதனால்தான் ரசிகர்கள் அவரை கால்பந்து உலகின் இளவரசன் என அழைக்கிறார்கள்.

எசிஎல் காயம்

அல்ஹிலால் கிளப்புக்காக 7 போட்டிகள் மட்டுமே விளையாடினார். அக்.2023இல் ஏசிஎல் காயம் காயத்தினால் அவதியுற்று வருகிறார். கடந்தாண்டில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிஎஸ்ஜியிலிருந்து 94 மில்லியன் டாலருக்கு அல் ஹிலால் அணிக்கு வாங்கப்பட்டார். இதில் சேர்ந்த ஒரே மாதத்தில் எசிஎல் காயத்தினால் விளையாடமலிருந்தார்.

தாய் கிளப்பான சன்டோஷுக்கு திரும்பும் நெய்மர்

முதன்முதலாக சன்டோஷ் கிளப்பில் விளையாடிதான் நெய்மர் புகழ்பெற்றார். அதற்கு பிறகுதான் 2013இல் பார்சிலோனா அணிக்கு தேர்வாகி பல மறக்க முடியாத ஆட்டங்களை மெஸ்ஸியுடன் ஆடினார்.

கடந்த ஒரு வாரமாகவே சன்டோஷ் கிளப் ரசிகர்கள் நெய்மர் வருகைக்காக காத்திருக்கிறார்கள். பிரெசிலின் லெஜண்ட் பீலே கூறியதாக, “நம்.10 சீருடையை அணிந்து மீண்டும் சண்டோஷ் கிளப்பில் விளையாட வேண்டும்” என விருப்பம் தெரிவித்ததாக ஏஐ மூலம் விடியோ வெளியிட்டுள்ளார்கள்.

நெய்மர் சன்டோஷ் கிளப்பில் 6 பட்டங்களை வென்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நெய்மர், “எனக்கு பிளமெங்கோவில் விளையாட ஆசை. ஆனால், சன்டோஷ் எனது சிறுவயது கிளப் அணி. எனது வீடு மாதிரி” என்றார்.

சன்டோஷ் கிளப்பின் நிர்வாகி ஒருவர் ஊடகங்களில் நெய்மர் புதியதாக கால்பந்து அணியை வாங்குவதாகக் கூறியதை மறுத்தார். மேலும், சன்டோஷ் கிளப்பில் இணைய நெய்மர் விரும்பியதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.